

பூஜா கிரியேஷன்ஸ் சார்பில் சி.நாகராஜன் தயாரிக்கும் படம் நாள் நட்சத்திரம். டைரக்டர் சக்தி சி.என்.ஆர்., இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புதுமுக நடிகர் சஞ்செய், புதுமக நடிகை கிருஷ்ண ஸ்ரீ ஆகியோர் அறிமுகமாகிறார்கள். மனோரமா, டெல்லி கணேஷ், குள்ளமணி, மீரான்கான் உள்ளிட்ட பலரும் படத்தில் இடம்பெறுகிறார்கள்.
படத்தின் கதைப்படி நாயகன் குமார் தாய், தந்தை இல்லாமல் அண்ணன், அண்ணி வளர்ப்பில் பொறுப்பில்லாமல் பொறுக்கியாக, ரவுடியாக வளர்கிறான். நாயகி உமாவோ, நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாத்தாவின் ஆசையை நிறைவேற்றும் லட்சியத்தோடு வளர்கிறார். ஒரு கட்டத்தில் குமாருக்கு உமா மீது காதல் வர, அதை அவன் சாடை மாடையாக தெரிவிக்க... அதனை உமா அலட்சியப்படுத்துகிறார். குமாரோ... நாயகி உமாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். இதற்கிடையில் உமாவின் அப்பா சுந்தரம் பிள்ளை, தனது சொந்தத்தில் உமாவுக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கிறார். அதை கேள்விப்பட்டு, கொதித்துப் போகும் குமார் ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார். அதுவே கதையின் திருப்பம். அதன் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெற்று, கோடீஸ்வரனாக, நல்ல மனிதனாக உயர்கிறான். அது எப்படி என்பதை படத்தின் மீதி கதை சொல்லும்.
நாள் நட்சத்திரம் படத்துக்கு ராஜ்பவன் இசையக்கிறார். கே.ஜி.மாதவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
No comments:
Post a Comment